முகத்தை மறைத்தவாறு ஆடை அணிந்திருந்த 4 பெண்களுக்கு நேர்ந்த கதி!!

558

முகத்தை மறைத்தவாறு ஆடை

அவசரகால சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முகத்தை மூடியவாறு ஆடை அணிந்திருந்த நான்கு பெண்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். இச் சம்பவம் அண்மையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றுள்ளது.

வர்த்தகர் ஒருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே வான் படையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர். இதன்பின்னர் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் தலையீட்டின் மூலம் அவர்கள் நான்கு பேரும் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், முகத்தை மறைக்கும் ஆடைகள் தொடர்பில் உத்தியோகபூர்வ நிலைப்பாடு இல்லாவிட்டாலும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, சமூகத்தலைவர்கள் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.