நாய்க்கு இருக்கும் அன்பு

அனுராதபுரத்தில் அன்பு, பாசம், இரக்கம் மிருகங்கள் மத்தியில் உள்ளதை புலப்படுத்தும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சங்கமித்த மாவத்தையில் உள்ள வீடு ஒன்றில் நாய் ஒன்றின் அன்பு பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. ஜயமுனி பிரேமாஞ்சலி டி சில்வா என்ற பெண், நாய் மற்றும் பூனை ஒன்றையும் வளர்த்து வருகிறார்.

ராணி என பெயரிடப்பட்டுள்ள நாய், தனது பாலை பூனைக்கு கொடுத்து பாசமாக பாதுகாத்து வருகிறது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.




