காலி, கந்தவிட்ட பிரதேசத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் நேற்று முன்தினம் இரவு இந்நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கெலி ஓயாவைச் சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பாரிசவாத நோய் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாகவும் நோயை தாங்கமுடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.