வவுனியாவில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 39ஆவது நினைவு தினம்!!

660

தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம்

தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 39ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று (01.09.2019) காலை 8.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி நினைவுகூரப்பட்டதுடன் அடிகளாரின் தமிழ் சேவை தொடர்பில் தமிழ் மணி அகளங்கன் கருத்துரையையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உபநகரபிதா சு.குமாரசாமி , வவுனியா நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராசா, வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவருமான செ.சந்திரகுமார், தமிழருவி சிவகுமார், சமூக ஆர்வளர்கள், நகரசபை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.