அவுஸ்திரேலியாவில் ப லியான இலங்கையைச் சேர்ந்த மாணவி : 700 மீற்றர் தொலைவில் இருந்த வாகனம்!!

523

இலங்கையைச் சேர்ந்த மாணவி

அவுஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த மாணவியொருவர் உ யிரிழந்த சம்பவம் தொடர்பான சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் குறித்த மாணவி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்த வாகனமானது விபத்து நடந்த இடத்திலிருந்து 700 மீற்றர் தொலைவில் உள்ள தேவாலயத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிங்டன் பகுதியில் உள்ள வீதிக்கடவையில் குறித்த மாணவி பாதையை கடந்தவேளை வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும். அல்லது www.crimestoppersvic.com.au என்ற பக்கத்தில் இரகசிய அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், உ யிரிழந்த மாணவி இலங்கையை சேர்ந்த நிசாலி பெரேரா (20 வயது) எனவும், அவர் அவுஸ்ரேலியாவின் Monash பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.