இந்திய அரசிடம் ஆதரவு நாடியிருக்கும் ஈழத்து சிறுமி!!

622

தனுஜா ஜெயக்குமார்

இந்தியாவில் உள்ள ஈழத்து சிறுமிக்கு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி வழங்க இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஜா ஜெயக்குமார் எனும் குறித்த சிறுமி தமது தாய் தந்தையருடன் தமிழ்நாட்டில் திருச்சியில் வாழ்ந்து வருகின்றார்.

சிறந்த நீச்சல் வீராங்கனையாக விளங்கி வரும் இவர், அண்மையில் பூனேவில் நடந்த அகில இந்திய நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவில் அக்டோபர் 21ஆம் திகதி நடக்கவிருக்கும் உலக நீச்சல் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

ஈழத்து அகதியான இவருக்கு உரிய கடவுச்சீட்டு வழங்க இந்திய அரசு மறுக்கிறது. அத்துடன் இந்த சிறுமி தமிழ் அகதியாக இருப்பதால் இலங்கை அரசும் அக்கறை காட்ட மறுக்கிறது. இதன் காரணமாக குறித்த சிறுமி தமது உதவியை நாடியுள்ளார். இந்த சிறுமியின் கனவை நனவாக்க நல் உள்ளங்கள் உதவ முன்வர முடியும்.