கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

587

கோர விபத்தில்..

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி, செட்டிபாளையத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளார். இன்று அதிகாலை கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த லொறியும் சிறிய கன்டர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, கன்டர் வாகனத்தின் சாரதி ஓட்டமாவடியைச் சேர்ந்த 41 வயதான இஸ்மாயில் நூர்ஜான் என்பவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வாகனத்தில் பயணம்செய்த ஓட்டமாவடியைச் சேர்ந்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.