இலங்கை இராணுவத்தின் அனைத்து தரப்பினரும் உயரிய ஒழுங்கத்தை பின்பற்றவேண்டும் என்று இராணுவ தளபதி லெட்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க கோரியுள்ளார்.
இராணுவ தலைமையக புதுவருட நிகழ்வில் பங்கேற்ற அவர் இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்கும் சீரான கடமைகளுக்கும் ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரிடம் இருந்து உரிய மரியாதை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தற்போது இராணுவத்துக்குள் புதிதான நிர்வாக அமைப்புக்கள் கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று நடைபெற்ற மற்றும் ஒரு நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, படையினர் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.