கிளிநொச்சி விஸ்வமடுப் பிரதேசத்தில் நேற்று பிற்பகல் தனியார் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீதே இத்தாக்குதலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த மூவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
காயமடைந்துள்ள இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் மற்றும் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இந்தக் கல்வீச்சுத் தாக்குதலின்போது பஸ் வண்டியின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.