யாழில், நள்ளிரவில் அ ட்டகாசம் செய்த கெமி வா ள்வெட்டுக் குழு!!

555

நள்ளிரவில் அ ட்டகாசம்

யாழ்ப்பாணம், பாசையூர் மற்றும் ஈச்சமோட்டைப் பகுதியில் கெமு என்ற வா ள்வெ ட்டுக் குழுவினர் நேற்று இரவு வீடுகளிற்குள் புகுந்து அ ட்டகாசம் செய்ததுடன் இளைஞர் ஒருவரையும் வெ ட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்க தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, சிங்கள மொழியில் உரையாடிய பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாசையூர் பகுதியைச் சேர்ந்த கெமி என்ற வா ள்வெட்டுக்குழுவினர் ஈச்சமோட்டை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை வா ளால் வெ ட்டிச் சேதப்படுத்தியுள்ளனர்.

அந்த வீட்டில் 6 பெண்கள் உட்பட 1 சிறுவனும் இருந்துள்ளார். என்ன காரணத்திற்காக என்று தெரியாமல் இருந்த வீட்டிற்காரர்கள் 1.30 மணியளவில் 119 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்க பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட போது, பொலிஸார் சிங்களத்தில் கதைத்துவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளனர்.

அதேநேரம், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டிற்குச் சென்ற போது, அங்கு ஏன் இரவு அறிவிக்கவில்லை என்று கேட்டதுடன், முறைப்பாட்டாளர்களின் முறைப்பாட்டிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் காத்திருப்பதாகவும், பொலிஸ் இதுவரையில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிடவில்லை என்றும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாசையூர் பகுதியில் தற்போது உருவாகியுள்ள இந்த கெமி வா ள்வெட்டுக் குழு அதேநேரம், இளைஞர் ஒருவரையும் வா ளால் வெ ட்டியுள்ளது. வா ள்வெ ட்டிற்கு இலக்காகிய இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக உருவாகியுள்ள இந்த கெமி குழு க ஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், இந்த குழுவிற்கும் பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதனால், பொலிஸார் அந்த குழு மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்வாறான வா ள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர், ஒருவரின் உயிர் பிரிந்ததன் பின்னரே பொலிஸார் நடவடிக்கை எடுக்க முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், முறைப்பாட்டிகுரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்குவதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.