கொழும்பில் புதிதாக திருமணம் செய்த தம்பதிக்கு நடந்த சோகம்!!

447

தம்பதிக்கு நடந்த சோகம்

கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் ஒரு வாரத்திற்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்ட இளைஞன் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளார்.

கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தாமல் 5 பேருடன் கடலுக்கு குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 25 வயதான இளம் குடும்பஸ்தர் உ யிரிழந்துள்ளார்.

கடலுக்கு சென்ற இளைஞன், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை கடலில் மிதந்த நிலையில் அவரது ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞனின் மனைவியும் குறித்த சந்தர்ப்பத்தில் இணைந்திருந்த போதிலும் அவர் ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளார். களனி டயர் தொழிற்சாலையில் இயந்திர செயற்பாட்டாளரான, தினுஷ ஜயங்க சுரேந்திர என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.