தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் நடிகர் விஷால் : பரபரப்புத் தகவல்!!

489

Vishalதமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவராக நடிகர் விஷால் நியமிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம் துவங்கியபோது நடிகர், நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். அதில் நடிகர் விஷாலும் ஒருவர். நடிகர் சங்க விவகாரத்திலும் கேள்விகள் கேட்டு சர்ச்சைக்கு உள்ளானார்.

ஊழலுக்கு எதிராக போராடும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள சூழ்நிலையில் அக்கட்சிக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் அக்கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி நடக்கிறது. நடிகர் விஷாலையும் இக்கட்சிக்கு இழுக்க முயற்சி நடப்பதாக பேசப்படுகிறது. விஷால் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தால் அவருக்கு தமிழக ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்கின்றனர்.

ஆனால் விஷால் தரப்பில் இது உறுதிபடுத்தப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தலைவராக போகிறார் என்பது வதந்திதான் என்கின்றனர். இணைய தளங்களில் யாரோ இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்பி உள்ளதாகவும் குறைப்பட்டனர்.