வெள்ளவத்தையில் பெண்களிடம் சூட்சுமமான முறையில் திருடன்!!

520

ஆலயத்தில் பக்தியோடு வழிபாடுகளில் ஈடுபடுவது போன்று பாசாங்கு செய்து விட்டு இளம் பெண்ணின் கைப் பையை இளைஞர் ஒருவர் திருடி சென்றுள்ளார்.

இச் சம்பவம் கொழும்பு வெள்ளவத்தை மல்லிகா வீதியில் உள்ள கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்திற்குள் பக்தர்களுடன் பக்கதராக நுழைந்த நபர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கிருந்து வெளியேறும் போது ஆலயத்தில் இருந்த பிறிதொருவரின் கைப்பையையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் ஆலயத்தில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த கைப் பையினுள் நகை, பணம். மற்றும் குறித்த பெண்ணின் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.