விவாகரத்திற்கு ஹிருத்திக்ரோஷனிடம் 100 கோடி கேட்ட மனைவி!!

273

Krithikஇந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மனைவி சுசானாவை பிரிந்துள்ளார். இருவரின் குடும்பத்தினரும் இது தற்காலிக பிரிவுதான் என்கின்றனர். ஆனால் இனிமேல் அவர்கள் சேர மாட்டார்கள் என்று இந்திப்பட உலகினர் உறுதியாக சொல்கிறார்கள். பிரிவுக்கான காரணம் தெரியவில்லை.

இதற்கிடையில் சுசானாவை விவகாரத்து செய்ய ஹிருத்திக் ரோஷன் பேரம் பேசி அவரிடம் 100 கோடி கொடுத்ததாகவும் அதன் பிறகுதான் சுசானா விவகாரத்துக்கு சம்மதித்தார் என்றும் இந்தி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. இதனை சுசானா மறுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது..

ஹிருத்திக் ரோஷனை பிரிய 100 கோடி நான் வாங்கியதாக செய்திகள் வந்துள்ளது. இதில் உண்மை இல்லை. இந்த செய்தியால் என் மனம் மிகவும் புண்பட்டு விட்டது. யூகத்தின் அடிப்படையிலேயே இதை எழுதி உள்ளனர். தனிப்பட்டவர்கள் வாழ்க்கை பற்றி இப்படி அவதூறு பரப்புவது முறையல்ல என்று சுசானா கூறியுள்ளார்.