புன்னகை அரசி பட்டத்தை வென்ற இலங்கை யுவதி!!

352

இலங்கை யுவதி

இத்தாலியின் வேனிஸ் ஜெஸ்சோலோவில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான மிஸ் இத்தாலி அழகு ராணி போட்டியில் இலங்கை வம்சாவளியான சேவ்மி தாருக பெர்னாண்டோ என்ற யுவதி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

அழகு ராணி போட்டியில் இத்தாலியை சேர்ந்த கோரோலினா ஸ்டாமரே வெற்றி பெற்றடன் செரினா பெட்ராலி என்ற யுவதி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் சேவ்மி தாருகா பெர்னாண்டோ புன்னகை அரசி என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். 20 வயதான சேவ்மி தாருகாவின் பெற்றோர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் குடியேறியுள்ளனர்.

இத்தாலியின் பாதுவா நகரில் பிறந்த சேவ்மி அழகியல் படிப்பில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளதுடன், மாடலாக தொழில் புரிந்து வருகிறார். மிஸ் இத்தாலி அழகி ராணி போட்டியின் இறுதி சுற்று தெரிவான இவர், Veneto மாநிலத்தின் அழகு ராணி போட்டியில் வென்றுள்ளார்.

மாகாண ரீதியாக கலந்து கொண்ட 187 போட்டியாளர்களில் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட 80 போட்டியாளர்களில் சேவ்மி தாருகாவும் இடம்பிடித்ததுடன், கடந்த வெள்ளிக் கிழமை இரவு நடந்த இறுதி போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.