இலங்கையில் வேகமாக பரவும் ஆபத்து!!

316

மலேரியா..

இலங்கையில் மலேரியா நோய் வேகமாக பரவும் ஆ பத்து ஏற்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாடு மற்றும் தம்பதிவ யாத்திரைக்கு சென்று நாடு திரும்புவோரினால் மலேரியா நோய்த் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தம்பதிவ சென்று மீண்டும் இலங்கைக்கு திரும்பியவர்களில் 5 பேர் கண்டி உட்பட பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பினால் 2016ஆம் ஆண்டு, மலேரியா முழுமையாக அகற்றப்பட்ட நாடாக இலங்கை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டிய தகவலுக்கமைய மலேரியா பாரியளவு அதிகரித்த நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் தம்பதிவ யாத்திரைக்கு வருடாந்தம் 5 இலட்சம் பேர் சென்று வருகின்றனர். இதன் காரணமாக இலங்கையில் மலேரியா வேகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர் A.P.D.ஹேரத் தெரிவித்துள்ளார்.

தம்பதிவ சென்று மீண்டும் இலங்கை வந்தவர்கள் அல்லது மலேரியா தொற்றுள்ள நாடுகளுக்கு சென்று இலங்கை திரும்புவோருக்கு இரத்த பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர் கேட்டுக்கொண்டுள்ளார்.