தெற்கு பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

810

Earthதெற்கு பசிபிக் கடல் பகுதியில் நியூசிலாந்து, ஓசியானா, வனாத்து சாலமன் தீவுகள் உள்ளன. இதில் வனாத்து தீவுப் பகுதியை அண்மித்துள்ள தெற்கு பசிபிக்கடலில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

கடலுக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு தாக்கியது. இது ரிக்டர் அளவில் 6.6 அளவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

96 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நில நடுக்கத்தின் தாக்கம் இருந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேத விவரம் பற்றிய தகவல் வெளியாகவில்லை.