வவுனியாவில் நாளை (03.01) வடமாகாண அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்கள் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளின் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்.
இச் சந்திப்பில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள், ஆலய பரிபாலன சபை, விளையாட்டுக் கழகங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள அமைச்சர், பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் கிராம மட்டத்தில் மக்களுக்கு நிலவும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.




