14 ஆயிரம் யூரோக்களை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
உடலின் பின்புறம் மறைத்து வைத்து இந்த வெளிநாட்டுப் பணத்தை எடுத்து வந்த அவர் உடனடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயற்சித்த போது போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் தடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து அவர் வெளிநாட்டுப் பணத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து கைப்பற்றிய 14 ஆயிரம் யூரோக்களின் பெறுமதி இலங்கை நாணய மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபா என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.




