கலக்கத்தில் ஜில்லா படக்குழு!!

522

JILLA

தலைவா படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மூலம் தடை உத்தரவுகள் பலப்படுத்தப்பட்டதால் மீண்டும் அதே நிலை தனது படங்களுக்கு வரக்கூடாது என்று உஷாராக செயல்பட்டு வருகிறார் விஜய்.

குறிப்பாக ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில் நடித்துள்ள ஜில்லா படத்தில் எந்தவொரு பஞ்ச் டயலாக்கும் இல்லாமல் கதைக்கு தேவையான வசனங்களை மட்டுமே பேசி நடித்துள்ளார்.

அப்படி பேசி நடித்துள்ள டயலாக்கும் யாரையாவது மறைமுகமாக தாக்குவது போல் தெரிந்தால் அந்த வசனத்தையும் மாற்றி பேசி நடித்திருக்கிறார். அதனால் ஜில்லாவுக்கு எந்த ரூபத்திலும் தடைகள் ஏற்படாது என்பதுதான் அனைவரது எண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது.

பொங்கலுக்கு படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டதால் ஜில்லா படத்தின் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை நகரத்திலுள்ள சில ஏரியாக்களில் ஜில்லா விஜய்யின் இராட்சத கட்அவுட் மற்றும் பேனர்களை வைக்க அவரது இரசிகர்கள் மன்றத்தினர் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த பொலிஸார் தடை விதித்து விட்டார்களாம்.

அதனால் பேனர்களை எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்களாம் விஜய் இரசிகர்கள். இதன்காரணமாக ஒருவேளை இதுவும் மேலிடத்து உத்தரவாக இருக்குமோ என்று விஜய் சமூகம் அதிர்ச்சியடைந்துள்ளதாம்.

படத்தை தயாரித்தவர்களோ படம் திரைக்கு வரும் நேரத்தில் இன்னும் என்னென்ன ரூபத்தில் பிரச்சினைகள் வரப்போகிறதோ என்று கலக்கமடைந்துள்ளனராம்.