யாழில் வாள் வெட்டுக்கு இலக்காகி அறுவர் படுகாயம்!!

679

knifeமோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த 6 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் யாழ். வசாவிளான் கோணாவளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

மேற்படி பகுதியிலுள்ள பிரார்த்தனை கூடத்திற்கு முன்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீதே இவ்வாறு வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் வசாவிளான் செல்வநாயகபுரம் பகுதியினைச் சேர்ந்த திலப் துஷாந்தன் (18), வல்லிபுரம் ரூபவதனன் (28) குழந்தைவேல் கலியுகவரதன் (45), முத்துலிங்கம் ஜெகநாதன் (30), துஷயந்தன் குணசீலன் (18), திலீப் ஜெயரூபன் (21) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.