இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்,
இந்திய தூதர் தேவ்யானி விவகாரத்தில் அதிக அக்கறை காட்டும் மத்திய அரசு இலங்கை தமிழர்கள் விவகாரத்திலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் அக்கறை காட்டாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங்,
இது உண்மையல்ல. இலங்கை தமிழர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பல முறை, இலங்கை அரசுடன் வாதம் நடத்தி உள்ளோம். இலங்கையின் வட மாகாணத்தில் தமிழர்கள் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனில் இரு தரப்பு மீனவர்களும் கலந்து கொள்ளும் வகையிலான பேச்சுவார்த்தையே தீர்வாக இருக்கும். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார்.




