அவருடன் சென்று வா என 15 வயது மகளை ஏமாற்றி அனுப்பிய தாய் : நம்பி சென்ற சிறுமி கண்ட காட்சி!!

2


சிறுமி கண்ட காட்சி


இந்தியாவில் பெண்ணொருவர் தனது 15 வயது மகளை 1 லட்சத்துக்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்த 15 வயது சிறுமியை அவர் தாய் பதார்பூரில் உள்ள அவரது சித்தியின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.ஆனால், அங்கு செல்வதற்கு பதிலாக நிசாமுதீன் பகுதியில் ஒரு ஹொட்டலுக்கு அவரது தாய் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், உன்னை ஒருவர் வந்து அழைத்துச் செல்வார். அவரே உன்னை வீட்டிற்கு திரும்ப கொண்டு வந்து விட்டுவிடுவார் என கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமி தாய் கூறிய நபருடன் சென்றார்.


அவர் அழைத்துச் சென்ற இடத்தில் சில பெண்கள் நகைகள், திருமண உடைகளுடன் இருப்பதை சிறுமி கண்டார். அதை சிறுமியிடம் கொடுத்த பெண்கள் அணிந்து கொண்டு தயாராக இருக்கும்படி கூறியுள்ளனர்.


பின்னர் அச்சிறுமியிடம், உன்னை ரூ.1 லட்சம் கொடுத்து உன் தாயிடம் இருந்து வாங்கிவிட்டோம் என கூறியுள்ளனர். இதையடுத்து பயந்து போன சிறுமி எப்படியோ தப்பித்து சொந்த ஊருக்கு வந்து நடந்ததை அங்கிருருந்தவர்களிடம் கூறிய நிலையில் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் சிறுமியிடம் விசாரித்த போது தாய், வளர்ப்பு தந்தை மற்றும் மூன்று சகோதரர்களுடன் தான் வசித்து வந்ததாகவும், தாய்க்கு கடன் உள்ளதால் தன்னை விற்றதாகவும் கூறினார்.

இதனையடுத்து அந்த சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்த பொலிசார் அவள் தாய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.