வவுனியா ஓமந்தை வண்ணான்குளம் அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் ஆலயத்தில் வவுனியா நகர பிரதேச செயலாளர் திரு.க. உதயராசா தலைமையில் ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (03.01) நடைபெற்றது.
ஆலய தர்மகர்த்தா அரசர் வேலுப்பிள்ளை குணரத்தினம், வவுனியா சிவசக்தி குழுமத்தின் அகரம் கல்வி அறக்கட்டளையும் இணைத்து வறிய மற்றும் பாடசாலையை விட்டு இடைவிலகிய 153 மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அடுத்தகட்டமாக வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில், செட்டிகுளம் பிரதேச செயலாளர் தலைமையில், செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் 500 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.