தந்தை கொடுத்த அதிர்ச்சி

மகளின் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் அவரின் தந்தை அதிகாலை உ யிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் மாகடுவாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தனது இளைய மகளின் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் அதற்கு முதல் நாள் இரவு உறவினர்களின் உதவியுடன் வீட்டை அலங்கரிக்கும் பணிகளில் குறித்த தந்தை ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அன்றிரவு 10 மணியளவில் அனைவரும் தேநீர் அருந்தியுள்ளனர். பின் குறித்த நபருக்கு லேசாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை மோசமானதை தொடர்ந்து, அங்கிருந்து நிகவெரடிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை அவர் உ யிரிழந்துள்ளார்.

நேற்று முற்பகல் நிகவெரடிய வைத்தியசாலையில் பி ரேத பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதுடன் பரிசோதனை அறிக்கையில் அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.




