மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

559

80 ஆயிரம் ரூபாய் அபராதம்

பலங்கொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதி பத்திரம், வரி செலுத்திய சான்றிதழ் மற்றும் வாகன அனுமதி பத்திரம் இன்மை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று பலங்கொட நீதவான் ஜயருவன் திஸாநாயக்கவின் உத்தரவின் பேரில் அவருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பலங்கொட கல்தொட்டை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான இளைஞனே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.