27 வயதான மனைவியின் ச டலத்தை பார்த்து கதறி அழுத கணவன் : விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

1


கதறி அழுத கணவன்


தமிழகத்தில் மனைவியை சமையலறையில் வைத்து கொ லை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் வசமாக சிக்கியுள்ளார். பொன்னேரியை சேர்ந்த தம்பதி திரேச்குமார் – கோமதி (27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திரேச்குமார் ஆந்திராவில் பணிபுரியும் நிலையில் குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் திரேச்குமார் கடைக்கு போய் கோழிக்கறி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து சமைக்க சொன்னார். கோழிக்கறியை எடுத்து கொண்டு கோமதி சமையலறைக்கு சென்ற நிலையில் குழந்தையை கவனித்து கொள்ளுமாறு கணவனிடம் சொன்னார்.


அதற்கு திரேச்குமார் மறுத்ததோடு இது தொடர்பாக மனைவியுடன் ச ண்டை போட்டார். இதையடுத்து குழந்தையையும் கவனித்து கொண்டு எப்படி, சமையலும் செய்வது என்று கோமதி கேட்க, திரேச்குமார் ஆத்திரமடைந்தார்.


அதனால் சரமாரியாக கோமதியை தா க்கியதுடன், கீழே கிடந்த ஒயரை எடுத்து கோமதியின் கழுத்தை சுற்றி இ றுக்கி கொ ன்றார். பின்னர் கோமதி தூ க்கிட்டு த ற்கொ லை செய்ததாக மாமியார் வீட்டுக்கு தகவல் சொன்னார்.

அ திர்ச்சியடைந்த அவர்கள், மகளின் ச டலத்தை கண்டு கதறி அழுதனர். திரேச்குமாரும் ஒரு ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். இதனால் திரேச்குமார் மீது சந்தேகம் வராத நிலையில், கோமதியின் உறவினர்களில் சிலருக்கு சந்தேகம் வந்துள்ளது.

இதையடுத்து, பொலிசாரின் உதவியுடன் கோமதியின் உ டல் பி ரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது. அதன் முடிவில் கோமதி கொ ல்லப்பட்டது தெரிந்தது, இதையடுத்து திரேச்குமாரிடம் நடத்திய விசாரணையில் மனைவியை கொ லை செய்ததை ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்தனர்.