வவுனியாவில் நடைபெறவுள்ள மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 14 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு!!

794

Vav

தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 14 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05.01)  மாலை 3 மணிக்கு வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உப தலைவர்களில் ஒருவரான சி.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிவில் அமைப்பின் தலைவரும் மன்னார் மறை மாவட்ட ஆயருமான அதி வணபிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் சிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் நா.பிரபாகரக்குருக்கள் அவர்களும் கலந்து கொள்வதுடன் சிறப்பு நிகழ்வாக “தமிழர்களும் அனைத்துலக சமூகமும்” என்ற தலைப்பில் அரசியல் ஆய்வாளரும் கவிஞருமான நிலாந்தன் அவர்களின் நினைவு பேரூரையும் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் அனைத்து தமிழ் தேசிய உணர்வாளர்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயலாளர் சி.கோபாலகிருஸ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.