மைத்திரிபால சிறிசேனவுடன் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் சந்திப்பு!!

636

Maithripala

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை, வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வட மாகாணத்தில் நிலவும் வைத்தியர், தாதி உத்தியோகத்தர், துணை மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான தட்டுப்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் சிநேகபூர்வமான இந்த சந்திப்பில் மாகாண சுகாதார சேவையை மேம்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வடமாகாண சுகாதார அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை வடமாகாண சபை பொறுப்பேற்ற பின்னர் மாகாண அமைச்சர் ஒருவர் மத்திய அமைச்சரை சந்தித்தது இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சந்திப்பில் வடமாகான சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜூட் ஆகியோர் கலந்து கொண்டனர்.