யாழில் தலைதூக்கும் வாள் வெட்டுக்குழுக்கள் : அச்சத்தில் மக்கள்!!

254


வா ள்வெ ட்டுக்குழுக்கள்



யாழ்ப்பாண இளைஞர்களை மீண்டும் அ ச்சுறுத்தும் புதிய கெமி வா ள்வ ட்டுக் குழுவினால், தா க்கப்படும், பல இளைஞர்கள் தொடர்பாக பொலிஸார் எந்தவித கரிசனையும் இன்றி வாள்வெட்டுக் குழுவிற்கு துணை போவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



நேற்று முன்தினம் மத்தியூஸ் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரை கெமி குழுவினர் கடத்திச் சென்று, தகாத வார்த்தைப் பிரயோகங்களுடன், இளைஞரை அ டித்துச் சி த்திரவதை செய்து, குறித்த காணொளி மற்றும் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.




இந்த சம்பவத்தில், நிலை குலைந்துபோன இளைஞரின் குடும்பத்தினரை ஜெயந்த என்ற இளைஞர் அ ச்சுறுத்தியதுடன், க டத்திச் செல்லப்பட்டு சி த்திரவதை செய்த இளைஞரின் தாயாரின் கழுத்தில் வாள் வைத்து அ ச்சுறுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட இளைஞனின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.


ஆவா குழுவினர் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களை நிகழ்த்திய போது, ஆவா குழுவை கைது செய்தோம் என கூறும் பொலிஸார், கெமி வாள்வெட்டுக்குழுவிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அவர்களுக்கு துணை போகின்றதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கெமி குழுவினரால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அ ச்சுறுத்தல் விடுத்த போதிலும், அந்த குடும்பங்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். ஆனால் பொலிஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காது, கெமி குழுவிற்கு ஆதரவு வழங்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.


யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட அரியாலை மற்றும் பாசையூர் பகுதிகளில் புதிதாக உருவெடுத்துள்ள கெமி குழுவின் முக்கிய புள்ளிகளாக கருதப்படும் பாசையூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை பொலிஸார் கைது செய்வதற்கு தயங்குவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை அ ச்சுறுத்தும், இந்த வாள்வெட்டுச் சம்பவங்களினால், இளைஞர்கள் பயத்துடன் வாழ்வதுடன், வெளிநாட்டிற்கு தப்பி ஓடும் நடவடிக்கைகளும் அரங்கேறி வருகின்றன. யு த்தம் உள்ளிட்ட பல்வேறு இழப்புக்களுக்கு முகம் கொடுத்த இளைஞர்கள் இன்று வாள்வெட்டுக் குழுக்களுக்கு பயந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை சி த்திரவதை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் அளவிற்கு, வாள்வெட்டுக் குழுக்களுக்கு தைரியத்தையும், துணிச்சலையும் பொலிஸார் வழங்குவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

பொலிஸாருக்கு குறிப்பிட்ட வாள்வெட்டுக் குழுவினர் சலுகைகளை செய்வதனால், பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காது, வாள்வெட்டுக் குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதனால் தான், இந்த வாள்வெட்டுக் குழுக்களின் அ ட்டகாசம் தலைக்கேறியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போது முளைத்துள்ள கெமி வாள்வெட்டுக் குழு தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி, வாள்வெட்டுக் குழுக்களிடம் இருந்து தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-தமிழ்வின்-