ராதிகாவின் விஜயம் வாக்கு நோக்குடையது, ஜெனீவா சவாலுக்கு முகங்கொடுப்போம் : கெஹலிய ரம்புக்வெல்ல!!

769

kakeliyaகனடாவில் குடியேறியுள்ள தமிழர்களிடம் வாக்கு சேகரிக்கும் நோக்கிலேயே கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இலங்கை வந்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கனடாவில் வடக்கு மக்கள் பலர் குடியேறியுள்ளதாகவும் அவர்களின் வாக்குகளைப் பெறவே ராதிகா வடக்கு பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த ஆண்டு இலங்கைக்கு ஜெனீவாவில் பாரிய சவால்கள் காணப்படுவதாகவும் அவற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
ஜெனீவாவில் இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு தருகின்றமை பெருமைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் தென் மற்றும் மேல் மாகாண சபைகள் கலைக்கப்படலாம் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இரத்து செய்யப்பட மாட்டதெனவும் அதற்கு இணையான பரீட்சை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.