நள்ளிரவில் பலத்த இடி, மழை : வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நடந்த சோகம்!!

1


பெண்ணுக்கு நடந்த சோகம்


சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வீதிகள் தோறும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. விடிந்தும் கூட நீர் பல பகுதிகளில் தேங்கி கிடப்பதால் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டு மின்சாரமும் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் சென்னையை சேர்ந்த செரினா பானு என்பவர் நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, கனமழையின் காரணமாக அவருடைய வீட்டு சுற்றுச்சுவர் திடீரென சரிந்து விழுந்துள்ளது. அந்த சமயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த செரினா ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், செரினாவின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.