இளம்பெண் செய்த மோசமான வேலை!!

1


மோசமான வேலை


சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோ சடியில் ஈடுபட்டதால் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் அருணா ஹன்சிகா. இவர் நுங்கம்பாக்கத்தில் இயங்கி வந்த இ ஜாப்ஸ் என்ற நிறுவனத்தின் எச்.ஆர்.மேலாளராக பணியாற்றி வந்தார்.வேலை வாய்ப்பு இணையதளங்களில், வெளிநாடுகளில் வேலை வேண்டி விண்ணப்பித்து வைத்திருந்தவர்களை பட்டியலிடுவது தான் இவரது பணியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டதாரி இளைஞர்கள் பலரிடம் அருணா பணமோ சடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் பணியாற்றி வந்த நிறுவனம், பட்டதாரி இளைஞர்களை தொடர்பு கொண்டு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளது.


அத்துடன் விசா செலவுகளுக்கு என தலா 50,000 ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், சொன்னபடி எவருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் ஆ த்திரமடைந்த இளைஞர்கள், இ ஜாப்ஸ் நிறுவனம் சென்று பார்த்தபோது பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


அதன் பின்னர் உடனடியாக ஆயிரம் விளக்கு பொலிசாருக்கு புகார் தெரிவித்தனர். அதில் போலி முத்திரைகள் மூலம் பணி ஆணைகள் மற்றும் தூதரக அனுமதிக் கடிதம் தயாரித்துக் கொடுத்து ஏமாற்றியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் அருணாவை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஜாப்ஸ் உரிமையாளர் நிருபன் சக்ரவர்த்தியை பொலிசார் தேடி வருகின்றனர்.