நம்பிச் சென்ற நபருக்கு நேர்ந்த சோகம் : தப்பிய இளம்பெண்!!

3


நேர்ந்த சோகம்


கால் டாக்சி ஓட்டுநர் கொ லை செய்யப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சென்னையில் கால் டாக்சி ஓட்டிவரும் நாகநாதன் என்பவரை கடந்த 6ம் திகதி அணுகிய ஒரு குழு குற்றாலத்திற்கு செல்ல வாடகைக்கு கார் வேண்டும் எனக்கூறியுள்ளது.அதன்படி அவர்களுடன் கிளம்பிய நாகநாதன், 8ம் திகதியன்று தன்னுடைய முதலாளிக்கு போன் செய்து, நாளை திரும்பிவிடுவதாக கூறியுள்ளார். ஆனால் மறுநாள் போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த முதலாளி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


அதன்பேரில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, மதுரை அருகே சாலையோரம் அ ழுகிய நிலையில் நாகநாதனின் ச டலம் கண்டெடுக்கப்பட்டது.


இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொலிஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காரை எடுத்துக்கொண்டு தப்பிய மர்ம கும்பலை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த ஜெயசுதா என்பவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.