லண்டனிலிருந்து இலங்கை வந்த இளம் யுவதிக்கு பா லியல் தொ ந்தரவு கொடுத்த 15 வயது சிறுவன்!!

329

லண்டனிலிருந்து இலங்கை வந்த இளம் யுவதி..

லண்டனிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் யுவதிக்கு பா லியல் தொ ந்தரவு கொடுத்த சிறுவனை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே சிறுவனை எதிர்வரும் 24ஆம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனிலிருந்து, திருகோணமலைக்கு சுற்றுலா வந்த 25 வயதுடைய இளம் யுவதி திருகடலூர் கடற்கரை ஊடாக நடந்து சென்றுள்ளார். இதன்போது தன்னை பா லியல் ரீதியாக தொ ந்தரவு செய்ததாகவும், எனினும் அந்த சிறுவன் யார் என்பது தனக்கு தெரியாது எனவும்,

அவர் நீல நிற டீசர்ட் அணிந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் எனவும் திருகோணமலை தலைமையக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் பாதிக்கப்பட்ட இளம் யுவதியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜஸ்மின் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஐ.எம்.ஹனிபா ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களை இளம் யுவதிக்கு அனுப்பி இறுதியாக சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.