அம்மாவின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் உ யிரிழப்பு!!

282


தனியார் மருத்துவமனை ஒன்றில் இரண்டு மில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவு செய்து, சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்துக்கொண்ட இளைஞர் ஒருவர் திடீரென உ யிரிழந்துள்ளார்.



இளைஞனின் ம ரணம் தொடர்பான பி ரேத பரிசோதனையை மேற்கொண்டு வரும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியர்கள் குழு , குறித்த சத்திர சிகிச்சையை செய்த விசேட மருத்துவ நிபுணரை அழைத்து இது சம்பந்தமான மேலதிக பரிசோதனைகளை நேற்று நடத்தியுள்ளனர்.

அனுராதபுரம் நகருக்கு அருகில் வசித்து வந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். இளைஞனின் ம ரணம் குறித்து பலத்த சந்தேகம் ஏற்பட்டதால், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட சட்டவைத்திய அதிகாரி பி ரேத பரிசோதனையை நடத்தியுள்ளார்.



மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த இளைஞனின் உ யிரை காப்பற்ற வேண்டுமாயின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இளைஞனின் தாய், மகனை காப்பற்ற தனது சிறுநீரகத்தை வழங்கியுள்ளார்.



சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை உடனடியாக செய்ய 26 லட்சம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள், நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன் பணத்தை பெற்று மத்திய மாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர் இளைஞன் கடந்த வாரம் அனுராதபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த இளைஞனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

ஆ பத்தான நிலைமையில் இருந்த அவர், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று முந்தினம் உ யிரிழந்துள்ளார்.


இளைஞனின் ம ரணத்திற்கான காரணத்தை அறிய உறவினர்கள் அவசரமான பி ரேதப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.

இளைஞனின் மூளைக்கு நச்சு கிருமி பரவியதால் இந்த மரணம் ஏற்பட்டதாக பி ரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இளைஞனின் ம ரணம் சம்பந்தமான கருத்து வெளியிட்டுள்ள உறவினர்கள்,

மூளைக்குள் நச்சு கிருமி பரவியதாக மருத்துவர் கூறியதும் ம ரணம் தொடர்பாக எமக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்படி நடக்க வாய்ப்பில்லை, சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று நாங்கள் கூறினோம்.

இதன் பின்னர் உ டலை வெட்டிய மருத்துவர், அப்படி சிறுநீரகம் மாற்றப்பட்டதாக தெரியவில்லை எனவும் பிறப்பில் இருந்த சிறுநீரகங்களே இருப்பதாகவும் அவை கெட்டுப் போயுள்ளன எனக் கூறினார்.


இதற்கு அமைய ம ரணத்திற்கான காரணம் அறிவிக்கப்பட்டது. நேற்று மீண்டும் பி ரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பி ரேதப் பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்த மருத்துவரும் வந்திருந்தார்.

சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளதை அவர் காட்டினாராம். எங்களுக்கு இதற்கு மேல் மருத்துவ விஞ்ஞானத்தையும் வேறு எவரையும் குற்றம் சுமத்த முடியாது என்று மருத்துவர் கூறினார்.

எனினும் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது எந்த பிரச்சினையும் இல்லை நோயாளி குணமாவார் என்றே சத்திர சிகிச்சையை செய்த மருத்துவர் எங்களிடம் கூறியிருந்தார்.

எனினும் பிள்ளையும் இ றந்து விட்டான். அம்மாவின் சிறுநீரகமும் இல்லாமல் போனது, கஷ்டப்பட்டு சேகரித்த 26 லட்சம் ரூபாய் பணமும் தண்ணீரில் கரைந்து விட்டது என தெரிவித்துள்ளனர்.