வவுனியாவில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடும் நடவடிக்கை ஆரம்பம்!!

1050

பனை விதைகளை நடும் நடவடிக்கை

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் நோக்கத்துடன் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இன்று (20.09.2019) ஐநூறு பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.

வவுனியா குளக்கரை அண்டிய பகுதிகளில் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர்களால் இரண்டாம் கட்டமாக பனை விதைகளை விதைக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளம் குளக்கரை அண்டிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.