கிரிக்கெட்டிலிருந்து சேவாக் ஓய்வு பெறுவாரா?

461

Shewagசர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சேவாக், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்தும் சொதப்பி வருகிறார்.

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் டெஸ்ட் (319), ஒரு நாள் (21 9) போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த இந்திய வீரர் இவர் தான்.

மோசமான துடுப்பாட்டம் காரணமாக, அவர் கடந்த 2013 மார்ச் முதல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் 2013-14 ரஞ்சி சீசனில் பங்கேற்றார். மொத்தம் களமிறங்கிய 13 இன்னிங்சில் 234 ஓட்டங்களை மட்டும் தான் எடுத்தார். டெல்லி அணியில் ஒன்று முதல் 6வது இடம் வரை என துடுப்பாட்டத்தில் மாறி மாறி களமிறங்கியும் பலன் கிடைக்கவில்லை.

இதனிடையே புஜாரா, ஷிகர் தவான், ரகானே என, இளம் வீரர்கள் இந்திய அணிக்காக திறமை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர். தவிர, உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி அணியில் இடம் பெற முடியாமல் பலர் காத்திருக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் சபையும் சேவக்கை வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது. தென் ஆபிரிக்க தொடர் முடிந்து, அடுத்து நியூசிலாந்து தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது.

இதிலும் கம்பிர், சேவக், யுவராஜ் சிங் போன்றவர்கள் சேர்க்கப்படவில்லை. இதில் கம்பிர், யுவராஜ் சிங்கிற்கு 32 வயது தான் என்பதால், அணியில் வாய்ப்பை மீண்டும் எதிர்பார்க்கலாம். ஆனால், சேவக்கிற்கு 35 வயதாகி விட்டது. பார்வையிலும் சிக்கல் உள்ளது. இதனால், இவர் விரைவில் ஓய்வு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.