அமெரிக்காவை சேர்ந்த ஜேக் என்று 14 வயது சிறுவன் உலக சாதனை படைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளான்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தை சேர்ந்த ஜேக் என்ற சிறுவனே பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்துள்ளான்.
ஜேக் 12 வயதாக இருக்கும் போது தந்தை அதிக எடையுள்ள பொருட்களை எளிதாக தூக்குவதை பார்த்துள்ளான். உடனே தந்தையிடம் சென்று, ஒருநாள் நான் இந்த உலகத்திலேயே வலிமை மிகுந்த சிறுவன் என்ற பெயரை பெறுவேன் என கூறியுள்ளான்.
தொடர்ந்து இரண்டரை வருடங்களாக விடாமுயற்சியுடன் உடற்பயிற்சி செய்து, தற்போது Powerliftng Bench Press Championships என்ற போட்டியில் கலந்து கொண்டு அசத்தியுள்ளான்.
அதாவது தன்னுடைய எடையை விட இருமடங்கு அதிக எடையுள்ள பொருட்களை தூக்கி சாதனை படைத்துள்ளான்.
இதுகுறித்து அவனது தந்தை, ஜேக் ஒரு அதிசய சிறுவன் அவனது மனதைரியம் தான் இப்போட்டியில் பங்கேற்க வைத்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பயிற்சியாளர் கூறுகையில், பயிற்சியின் போது காயங்கள் குறித்து ஜேக் ஒருபோதும் குறை கூறியதில்லை என்றும், மருத்துவர்களின் வழக்கமான சோதனைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறான் என்றும் தெரிவித்துள்ளார்.




