தொடரும் அடைமழை : வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!!

551

தொடரும் அடைமழை

நாடாளவிய ரீதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஆமர் பாபர் சந்தி, கொட்டாஞ்சேனையில் உள்ள ஜிந்துபிட்டி, ஜோர்ஜ் ஆர் சில்வா சந்தி, ஜீதாவன வீதி, ரொபர்ட் குணவர்தன சந்தி, பேஸ்லைன் வீதி மற்றும் தெமட்டகொடயில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 3.30 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி கட்டுநாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அதற்கமைய கட்டுநாயக்கவில் 219.1 மில்லிமீற்றர் மழையும், வதுரப பிரதேசத்தில் 175.0 மில்லிமீற்றர் மழையும், ஹியாரா பிரதேசத்தில் 172.5 மில்லிமீற்றர் மழையும், ஹிக்கடுவ பிரதேசத்தில் 164.5 மில்லிமீற்றர் மழையும், யக்கமுல்ல பிரதேசத்தில் 162.5 மில்லி மீற்றர்மழையும், மினுவாங்கொடயில் 161.0 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.