நிச்சயம் அரசியலில் குதிப்பேன் : நமீதா அதிரடி பேட்டி!!

754

Namitha-At-Cherrybit-Opening-Stillsநான் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என நடிகை நமீதா குறிப்பிட்டுள்ளார். இது குறித்துஅவர் கூறியுள்ளதாவது..

என் திருமணத்தை பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வில்லை. நான் அரசியலுக்கு கட்டாயம் வருவேன். முழுநேர அரசியல்வாதியாக மாறுவேன். எந்த கட்சி என்பதை இப்போது சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

அத்துடன் மோடியின் பிரச்சாரம் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி சாதாரண மக்களின் குரலாக ஒலிக்கிறது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

விஜயகாந்த் அனைத்து கட்சிகளும் அவரை தேடி வருகிற அளவுக்கு பலம் வாய்ந்து இருக்கிறார். ஜெயலலிதா நிறைய நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.