ஒரே விமானத்தின் விமானிகளாக தந்தையும், மகனும் : வரலாற்றில் முதல் சம்பவம்!!

421

ஒரே விமானத்தின்..

இலங்கை விமான வரலாற்றில் முதன்முறையாக ஒரே விமானத்தில் வி மானிகளாக தந்தையும், மகனும் பணியாற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எயார் ஏஷியா ஏ.கே.047 என்ற விமானத்திலேயே குறித்த தந்தையும், மகனும் வி மானிகளாக செயற்பட்டுள்ளனர்.

இந்த விமானமானது நேற்று இரவு மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் ஒரே விமானத்தில் பணியாற்றி திரும்பிய தனது கணவனையும், மகனையும் வரவேற்கும் நோக்கில் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இது தொடர்பில் தந்தையான விமானி உதித்த தன்வத்த கூறுகையில், எனக்கு இந்த விமான பயணம் மிகவும் விசேடமான ஒன்றாகும். நான் என்னுடைய மகனுடன் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை எயார் ஏசியா விமானத்தை செலுத்தி வந்தேன்.

இதன்போது விமானத்தில் எனக்கு உதவி வி மானியாக செயற்பட்டது எனது அன்புக்குரிய மகனே. இது நாம் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ஒரு கனவு. எனக்கும், மகனுக்கும் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தின் மூலம் இலங்கையர்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடையலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மகனான வி மானி கவீஷ தன்வத்த குறிப்பிடுகையில், சிறுவயதில் இருந்தே இது என்னுடைய கனவு. தற்போது 22 ஆவது வயதில் இந்த கனவு சாத்தியமாகியுள்ளது. நான் இந்த நிலைக்கு வர உதவிய எனது பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.