மன்னாரில் பாரிய மரம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல்!!

436

மன்னாரில்..

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் 56 மைல் கல் பகுதியில் சீரற்ற கால நிலை காரணமாக பாரிய மரம் ஒன்று நேற்று முற்றாக வீதி நடுவில் முறிந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக பிரதான பாதை ஊடாக போக்குவரத்தை மேற்கொண்ட வாகனங்கள் அனைத்தும் சுமார் இரண்டு மணித்தியாளங்களுக்கு மேலாக வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

குறித்த விடயம் தொடர்பாக இசைமாலைதாழ்வு கிராம சேவையாளர் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இரண்டு மாணித்தியாளங்களுக்கு மேலாக வருகை தரவில்லை என சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அறிந்து கொண்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் ஸ்டாலின் உடனடியாக தனது சொந்த முயற்சியில் குறித்த பாரிய மரத்தினை தனது ஊழியர்களை கொண்டு அகற்றி போக்கு வரத்து நெரிசலை சரிசெய்துள்ளார்.