யாழ்ப்பாணப் பெண் மாயம்
கொழும்பில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கா ணாமல்போயுள்ளார் எனவும், அவர் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெய்வேந்திரம் சிவதர்சினி என்பவர், உறவினர் ஒருவரைச் சந்திப்பதற்காக கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளை, கடந்த சனிக்கிழமை அன்று இராணுவப் புலனாய்வாளர்கள் என அடையாளம் காட்டப்பட்ட சிலரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதன்பின்னர், அவர் என்ன ஆனார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். கா ணாமல்போன குறித்த பெண் முன்னாள் போராளி எனவும், அவரது கணவர் (அன்புச்சோதிலிங்கம் அன்பு) விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது உ யிரிழந்தார் எனவும் உறவினர்கள் மேலும் கூறினர்.