வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டமையை வெ டி கொழுத்தி கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

468

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்

ஐக்கிய தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் வெ டி கொழுத்தி கொண்டாடினர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் குழப்பம் நீடித்த நிலையில் இன்று மாலை அமைச்சர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரின் மரக்கறி மொத்த விற்பனை நிலையம் முன்பாகவும், வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாகவும் வெ டி கொழுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது எங்கள் ஜனாதிபதி சஜித் அவர்களே வாழ்க என ஆதரவாளர்கள் கோசம் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.