உயிரை பணயம் வைத்து பெண்ணை காப்பாற்றிய நபர் : நெகிழ்ச்சியான செயல்!!

449

அம்பலங்கொடயில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணொருவரை வர்த்தகர் ஒருவர் துணிச்சலாக செயற்பட்டு கா ப்பாற்றியுள்ளார்.

அந்தப் பகுதியை சேர்ந்த மஹேஷ் கமகே என்ற நபரே, ஆற்றில் கு தித்து சேற்று நீரில் அ டித்து செல்லப்பட்ட பெண் ஒருவரை கா ப்பாற்றியுள்ளார்.

6 இலட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்காக மஹேஷ் தனது மோட்டார் வாகனத்தில் செல்லும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தல்கஸ்கொட பாலத்திற்கு அருகில் பாரிய மக்கள் கூட்டம் குழுமியிருந்ததை மஹேஷ் அவதானித்ததுடன் அங்கு சென்றுள்ளார். இதன்போது சேற்று நீரில் அ டித்து செல்லப்பட்ட பெண் ஒருவரை அவதானித்த மஹேஷ் தனது உ யிரை பற்றி சிந்திக்காமல் பெண்ணை காப்பாற்ற ஆற்றில் கு தித்துள்ளார்.

கு திக்கும் போது அவரது தனது பையில் இருந்த 6 இலட்சம் ரூபாய் பணத்தையும் மறந்துள்ளார். 100 மீற்றர் தூரம் நீந்திச் சென்று பெண்ணின் உ யிரை கா ப்பாற்றியுள்ளார்.

கா ப்பாற்றப்பட்ட பெண் தற்போது பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகிறார்.