இந்த வருடத்தில் 20 நகரங்களை அபிவிருத்தி செய்ய திட்டம்!!

549

Colomboஇந்த வருடத்தில் மேலும் சில நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்கு மேலதிகமாக இந்த திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

இதன்படி கோமாகம, மொரட்டுவ, நுகேகொட, மாத்தறை, ஊருபோக்க, இமதுவ, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, தியத்தலாவ, பண்டாரவளை, அநுராதபுரம், படுவஸ்நுவர, நாரம்வல, தங்கொட்டுவ, ரம்புக்கன, வீரகெட்டிய, எகலியகொட மற்றும் புலத்சிங்கள நகரங்கள் இந்த அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளன.