வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 25 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பத்திரம்!!

874

போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (30.09.2019) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 25 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 3 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுமார் இரு மணிநேரத்தில் மாத்திரம் மூன்று (03)சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன் இருபத்தைந்து (25) சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம், முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம் , தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.