யாழ்ப்பாணத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் நேர்ந்துள்ள வி பரீதம்!!

499

யாழ்ப்பாணம் பிரதான வீதியின் மடத்தடி சந்திக்கு அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நபரொருவர் நிறுத்தி வைத்திருந்த மோட்டார்சைக்கிள் திடீரென தீ பற்றிய நிலையில் அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைக்கும் கராஜ் பகுதியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படையினர் அவ்விடத்துக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.