அமெரிக்காவின் வீதியில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு!!

865

Flight

அமெரிக்க நியூயோர்க் நகரின் முக்கியமான தீகான் அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு குட்டிவிமானம் அவசரமாக தரையிறங்கியது.

இந்த அதிவேக நெடுஞ்சாலையில் சென்ற எந்த வாகனத்திலும் மோதாமல் பத்திரமாக இறங்கியது குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.

ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட இந்த குட்டிவிமானத்தில் பயணித்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதில் ஒருவருக்கு மட்டுமே லேசான காயம் ஏற்பட்டிருந்தது.

இவர்கள் அனைவரும் கனக்டிகட் டேன்பர்ரி விமானநிலையத்திலிருந்து சுதந்திர தேவி சிலையை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். வரும் வழியில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த குட்டிவிமானம் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுகுறித்து நியூயோர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.